Sunday, December 25, 2005

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

போன வருடம், இதே நேரம் சுனாமி செய்தியை கேட்டு அதிர்ந்து போய் இறுந்தோம். அது நடந்து ஒரு வருடம் ஆகிறது !!

இந்த வருடமாவது சுனாமி, நிலநடுக்கம் போன்ற துரதிஷ்டங்கள் இல்லாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

எங்கள் குடும்பத்தின் சார்பில் உங்கள் அனைவருக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

Monday, December 19, 2005

மிரட்டும் மாலா ?!

என் மனைவி என்னை அழைத்தாள் "சீக்கிரம் வாங்க , சன் டீவீ பாருங்க ..அடுத்த புயலுக்கு என்ன பெயர் வச்சிருக்காஙக தெரியுமா ? "

மிரட்டும் மாலா !!!

நம்ம ஊர்லயும் புயலுக்கு பெயர் வைக்க ஆரம்பிச்சுட்டாங்களா ?

அடுத்தது என்ன ?

சீறும் சீதா ?
அழிக்கும் அகல்யா ?
வீசும் விஜயா ?
பாயும் புவனா ?
பதுங்கும் பத்மா ?

இதுக்கே ஒத்தனுக்கு வேலை கொடுத்துடுவானுங்க, வானிலை ஆய்வு மையத்துல , புயலுக்கு பெயர் வைக்க !!

visithra version :

=============================

en manaivi ennai avasaramaga azhaiththal .. seekiram vaanga, sun tv paarunga.. aduththa puyalukku enna peyar vachchanga theriyuma ..

mirattum maalaa !!

namma orulayum puyalukku peyar vaikka aarambichchuttangala !!

aduththathu enna ?

seerum seetha ?
azhikkum agalya ?
veesum vijaya ?
paayum bhuvana ?
padungum padma ?

idukke oruththanukku velai kuduththuduvaanunga vaanilai aayvu mayyaththula.. puyalukku peyar vaikka !!

Sunday, December 18, 2005

ஜாவாஸ்கிருப்ட் : இன்றைய ஸம்ஸ்கிருதம் ?

ஜாவாஸ்கிருப்ட் : இன்றைய ஸம்ஸ்கிருதம் ?

அண்மையில் எங்கள் வீட்டில் என் இரண்டாவது குழந்தையின் பெயர்சூட்டு விழா நடைபெற்றது. வாத்தியார் வீட்டுக்கு வந்து பூஜையை நடத்தி வைத்தார். எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர். முதலில் நடந்த கணபதி ஹோமத்தை நான் செய்தேன். பிறகு பெயர் சூட்டும் பூஜையில் உள்ள மந்திரங்களை நான் சொல்ல வேண்டி இருந்தது. அப்போது கால கட்டாயத்தினால் அவர், "இந்த மந்திரங்களை நான் சொல்லறேன். நீங்க காயத்ரீ மந்திரத்தை ஜபிச்சுணடே இருங்கோ. கடைசீல என் கூட சேர்ந்து சொல்லுங்கோ !". என்றார். நானும் அவருடைய வேகத்திற்க்கு ஈடு கொடுக்க முடியாததால், "சரி" என்று சொன்னேன். இதில் எனக்கு கொஞ்சம் மனவருத்தம் தான் ! குழந்தை என்னுடையது. பெயர் வைப்பவன் நான். இதே மந்திரம் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருந்திருந்தால் நானே சொல்லி இருப்பேனே !!


இது நடந்து சில நாட்களில், என் ஆங்கில வலைப்பதிவின் உருவத்தை ("template") மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது எனக்கு "ஜாவா ஸ்கிருப்ட்" கற்றுக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ பொருமை இல்லை ! என் நண்பரின் மகன் நிகில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தான். அவனுக்கு "ஜாவா ஸ்கிருப்ட்" தெரியும். அவன் என்ன சொன்னான் தெரியுமா ? "நான் இந்த code எழுதறேன். நீங்க உங்கள் லிங்க் லிஸ்ட் மட்டும் எடுத்து முன்னாடியும் பின்னாடியும் இந்த code எழுதிக்கோங்க !". இதிலும் எனக்கு அதே மன வருத்தம் தான்.

அந்த காலத்தில் பிராமணர்கள் படிப்பறிவை பயன்படுத்தி, படிப்பறிவில்லாதோரை ஏமாற்றியதாக சொல்லும் இன்றைய சமூகத்தில், பிராமணனாக பிறந்த எனக்கு அன்றைய படிப்பரிவில்லாதவனின் நிலமை தான் !!

அன்று ஸ்ம்ஸ்கிருதம் தெரியாதவனின் நிலை இன்று "ஜாவா ஸ்கிருப்ட்" தெரியாதவனுக்கு வந்துவிட்டது. இன்னும் 25-50 ஆண்டுகளில் ஸாப்ட்வேர் தெரிந்தவர்கள், தெரியாதோர் வீட்டுக்கு சென்று "வேலைகள்" செய்து தட்ஷணை வாங்கும் காலம் வந்துவிடும் !!

என்னை பொருத்தவரை இவ்வுலகில் நான்கு ஜாதிகள் தான். அதை படமாய் கீழே வரைந்திருக்கிறேன்.



இந்த பிரிவுகள் அன்றுமுதல் இன்றுவறை மாறவில்லை !! படிக்காத ஏழைகள் எல்லோராலும் ஏமாற்றப்படுகின்றனர். படித்த ஏழைகள் படிப்பறிவை பணத்துக்கு பயன்படுத்த முடியாமல், ஞானம் செல்வத்தைவிட உயர்ந்தது என்று பிரசாரம் செய்வார்கள். இதில் பணம் என்றுமே பணமாகத்தான் இருக்கிறது. ஆனால் படிப்பு அல்லது ஞானம் என்பது காலத்தின் வெவ்வேறு தருணங்களில், பல அவதாரங்கள் எடுத்துள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்னால், வேத காலங்களில் ஸாஸ்திர சம்பிரதாயங்கள் சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இன்று அமெரிக்காவில் உளவு ஞானம் முக்கியத்துவம் அடைந்துள்ளது. சிலறுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை வைத்து உலக வரலாற்றையே மாற்றுகிறார்கள் ! மேலை நாடுகளின் தொழில்நுட்ப முதன்மை இப்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது. ஏன் ? இந்தியாவும் சீனாவும் சாப்டுவேர், உற்ப்பத்தி போன்ற துறைகளில் முதலிடத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன. இன்று சாப்டுவேர், உற்ப்பத்தி ஞானம் வேத பாராயணங்களின் இடத்தை பிடித்து விட்டன !

நான் பிரித்துள்ள சாதிகள் மாறும் என்று நினைக்கிறீர்களா ?

ps. I have been working on this post for the last one week. There is no visithra version for this post because it has been rewritten in english separately. Hasnt been posted yet. Working on the political correctness !!

visithra, et. al., wait for a day or two and you will see the englipish version..

Tuesday, December 13, 2005

மூலையில் தூங்கும் சுமைதாங்கி

எங்க வீட்டில் இந்த பையை "ஜோல்னா பை" என்று சொல்லுவோம். ஓரு காலத்தில் இந்த பை இல்லாமல் எங்கேயுமே கிளம்ப மாட்டேன் !! இந்த பைக்கு ஏன், எப்படி, எப்போது ஜோல்னா பை என்று பெயர் வந்தது என்று எனக்கு தெரியாது.





மேல்நிலை பள்ளியில் படிக்கும்போது இந்த பையில்தான் புத்தகங்களை எடுத்து செல்வேன். மந்தைவெளியிலிருந்து தி. நகர் வரை, வாரம் மூன்று முறை வெய்யிலிலும் மழையிலும் ஐ.ஐ.டீ. கிளாஸ் சென்றபோது, இந்த ஜோல்னா பை தான் துணைவந்தது !! கல்லூரி நாட்களிலும் இதே பைதான் இருந்தது. நானும் என் நண்பர்களும் பல வண்ணங்களில் இதே போல பைகளுடன் சதாஸர்வ காலமும் காட்சி அளிப்போம்.

அமெரிக்கா வந்ததும் இந்த பையுடன்தான் !! முதன் முதலாய் இங்கு வந்தபோது நானும் என் நண்பன் ஸ்ரீவத்ஸனும் ஜோல்னா பையுடன் புது மாணவர்களை வரவேற்க்கும் "பார்டி"க்கு சென்றதை என்னால் மறக்கவே முடியாது. ஆனால் என் ஜோல்னா நாட்களுக்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்துவிட்டது ! இங்கு வந்து ஒரு மாதம் இருக்கும். காலையில் உப்புமா செய்து மதிய உணவுக்காக எடுத்து சென்றேன். உப்புமா குளிரில் விரைத்து பாறையாகிவிட்டது !! அடுத்த நாளே ஒரு "லெதர் பாக்பாக்" வாங்கிவிட்டேன். ஒரு காலத்தில் இணைபிரியாமல் இருந்த நானும் என் ஜோல்னாவும் பிரிந்துவிட்டோம்.


நேற்று இரவு கிளாஸட்டை திறந்து பார்த்த போது என் பை கண்ணில் பட்டது. ஒரு மூலையில் சோகமாக தொங்கிக்கொண்டு இருந்தது. பழைய நினைவுகள் கரை புரண்டு ஓட துவங்கின . . .


=====================

Visithra Version

enga veetil intha paiyai "jOlnaa pai" enRu solluvOm. Oru kaalaththil intha pai illaamal engkaiyumE kilamba maaTTEn !! indha paikku En, EppaTi, eppOthu jOlnaa pai enRu peyar vanthathu enRu enakku theriyaathu.

mElnilai paLLiyil paTikkumpOthu intha paiyilthaan puththaganggaLai eTuththu selvEn. manthaiveLiyilirunthu T. Nagar varai vaaram moonRu muRai veyililum mazhaiyilum IIT class sendra pothu, intha jOlnaa pai thaan thuNaivanthathu !! KallUri naaTkaLilum idhE paithaan irunthathu. naanum en naNpargaLum pala vaNNaGaLil idE paiyuTan sathaaSarva kaalamum kaaTchi aLippOm.

amerikaa va~nthathum i~ntha paiyuTanthaan !! mudhan muthalaay i~Ggu va~nthapOthu ~naanum en ~naNpan SrIvathSanum jOlnaa paiyuTan pudhu maaNavargaLai varavERkkum "paarTi"kku senRathai ennaal maRakkavE muTiyaathu. aanaal en JOlnaa ~naaTkaLukku amerikkaa muRRupuLLi vaiththuviTTathu ! i~Ggu va~nthu oru maatham iRukkum. Kaalaiyil uppumaa seythu mathiya uNavukkaaka eTuththu senREn. uppumaa kuLiril paaraiyaakiviTTathu !! aTuththa ~naaLE oru "lethar baakpaak" vaa~ggiviTTEn. oru kaalaththil iNaipiriyaamal iru~ntha ~naanum en JOlnaavum piri~nthuviTTOm.

netriravu Closet'ai thiranthu paarththa pOthu en pai kaNNil paTTathu. pazhaiya ninaivukaL karai puraNTu OTa thuvangina . . .

Thursday, December 08, 2005

செய்திகள் - வாசிப்பது சுந்தர்..

அமெரிக்காவில் படிக்க வந்த முதல் நாள். நான் தங்கி இருந்த மாணவர்கள் வீட்டில் எல்லோரும் டீவீ-க்கு முன்னால் உட்கார்ந்து இருந்தார்கள். ஒரு மாணவன் என்னையும் அழைத்தான் "சீக்கிரமாக வா. இந்த ஊர்ல செய்திகள் பாக்கலைன்னா நாளைக்கு வேலையே ஓடாது !"

இந்த செய்திகள்ள அவ்வளவு "matter" இருக்கா ? ன்னு நானும் ஆச்சர்யப்பட்டு போய் உட்கார்ந்தேன்.

முதல் செய்தி : இன்று ஒருவன் அலெகினி அவென்யூவில் சுட்டுக்கொல்லப்பட்டான் !

நான் : செத்தவன் நடிகனா ?
சீனியர் : இல்லை
நான் : அரசியல்வாதியோ ?
சீனியர் : இல்லை
நான் : யார் அவன்?
சீனியர் : எவனோ என்னையும் உன்னையும் மாதிரி ஒரு ஆளுப்பா !!
நான் : அப்போ எதுக்கு நியூஸ்ல சொல்லரறாங்க ?
சீனியர் : இது "லோக்கல்" செய்திகள். இங்க எல்லாம் ஒருத்தன் செத்தாகூட செய்திகள்ள சொல்லுவாங்க.
நான் : நம்ம ஊர்ல ஒரு ஒரு சாவா செய்திகள்ள சொல்லணும்னா, அதுக்கு ஒரு சானலே வைக்கணும் !!
சீனியர் : வாய மூடிக்கிட்டு சும்மா இருப்பா.. வந்து ஒரு நாள் ஆறது..அதுக்குள்ள இந்த லொள்ளா ?

இந்த சம்பவம் நட்ந்து 13 வருட்ங்கள் ஆகிவிட்டது. அப்போது "ச்ன் டீவீ" பிறக்கவில்லை !!
தூர்தர்ஷன் மட்டும் தான் இருந்தது. அப்போது இந்திய தொலைகாட்சியில் செய்திகள் அருமையாக இருக்கும். அமெரிக்காவில் செய்திகள் மிக சுமாராக இருக்கும். எல்லா சானல்களிலும் ஒரே செய்தியை ரம்பம் போட்டு அறுப்பார்கள். அடுத்த நாள் அதை பற்றி பேச்சு மூச்சே இருக்காது !! (no closure on continuing events). புதிதாக எதாவது ஒரு விஷயம் முக்கிய செய்தியாகிவிடும்.

இப்போது நமது செய்திகளும் இப்படி ஆகிவிட்டது.

7 மாதங்களுக்கு முன் : ஜயலட்சுமி .. இப்போது அவர் என்ன ஆனார் ?

5 மாதங்களுக்கு முன் : ஜயேந்திரர் தினமும் முக்கிய செய்திகளில் இருந்தார்.. இன்று அவரை யாரும் சீண்டுவதில்லை !!

3 மாதங்களுக்கு முன் : குஷ்பூ.. இப்போது அவ்வளவாக செய்திகளில் அடிபடுவதில்லை..

இதில் ஒரே ஒரு விஷயத்தை வைத்து மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.. தமிழ் செய்திகளில் ஒரு செய்தி ஒரு வாரமாவது முக்கிய செய்தியாக இருந்துவிட்து தான் வெளியேருகிறது. அமெரிக்கா ஸ்டைலில் தமிழ் செய்திகளும் பரபரப்பை தேடி சென்று கொண்டிருக்கிற்து !!

======================

visithra version :

My first day as a student in the USA ! Naan thangi irundha veetil ella pasangalum TVkku munnal uttkarndhu irundhargal. Seekiram vaa. inge news pakkalenna naalaikku velaiye Odathu ! Mmm. indha local newsla ivvalavu matter irukkannu naanum poi utkarndhen..

mudhal news : "one person was shot and killed in Allegeny avenue today"..

me : was the guy who was shot an actor ?
senior : no
me : politician, social worker ?
senior : no
me : what is his claim to fame ?
senior : avan onnaiyum ennaiyum pola oru saadharna aalu pa.
me : apparom en avan seththathai perisa newsla sollaraanga.
senior : idhu local news pa. inge appidi than solluvaanga. vandhu oru naal than aarathu. adukkulla ivvalo loLLa. vaaya moodikittu ukkaru !!

indha sambavam nadandhu 13 varusham aachu. appo sun TV innum varale. DoorDarshan mattum dhan India-la irundhudhu. appo enakku DDya ninaichcha perumaya irukkum. Inge irukkara newsa vida evvalavo better. inge newla oru continutiye kidayadhu. inniki seththa naalaikku paalnnu sollara madhiri inniki newsla vara vishayaththukku oru closure kidayathu. verum sensationalism dhan.

aana innikki tamizh newsum appidi dhan aayindu varadhu.

7 months back : jayalakshmi was news everyday for a week. now where is she . what happened to the issue ?

5 months back : Jayendhra Saraswathi was news every day. where is he now ?

3 months back : Kushboo.. now the news is fading away.

the only consolation is that in Tamizh news the main news stays for at least a week as opposed to a day here in the US. But our news channels are also copying the US and going for sensationalism rather than closure!!

Saturday, December 03, 2005

அதிசயம் ஆனால் உண்மை !!

ச்ன் டீவீ நேயர்கள் "சிதம்பர ரகசியம்" சீரியல் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இன்த தொடர் "நாடி" ஜோசியத்தை மையமாக கொண்டது.

1996'ல் நான் அமெரிக்காவில் படிப்பை முடித்துகொண்டு இருந்தேன். அப்போது காலிங் கார்டு (calling card) உபயோகித்து இந்தியாவில் இருந்த என் பெற்றோறை கூப்பிட்டேன். அப்போதய வழக்கம் போல ச்ண்டை !!

என் பெற்றோர் என் கை ரேகைக்ளை தபாலில் அனுப்பு என்றார்கள்.. எனக்கு ஜாதகம், ஜோசியம் மீது வெருப்பு !! எனக்கென்று ஒரு பெண் இந்த உலகில் பிரந்து இருந்தால் அவளை இந்த ஜோசியர்களால் ஏன் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை ?

இந்த சண்டை ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் நீடித்திருக்கும். அப்போது என் "அட்வைசர்" (thesis advisor -குரு) ரூமுக்குள் வந்தார். அமெரிக்கரானாலும் இந்திய கலாசாரத்தை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்தவர். "இந்த சின்ன சின்ன விஷயங்களுக்காக ச்ண்டை போட்டு என்ன சுகத்தை கண்டாய் ? கை ரேகை தானே கேட்கிறார்கள் ? குடுத்துவிடு ! அவர்களுக்கு அதை வைத்து ஏதேனும் தெரிந்தால் அதை அவர்களோடு வைத்துக்கொள்ள சொல்.. " என்றார்.. அவரே போய் ஒரு காகிதத்தில் என் லாபில் இருந்த இங்க்கை வைத்து என் கை ரேகைக்ளை பதிவு செய்தார்.. ஒரு கவரில் அந்த காகிதத்தை போட்டு என் வீட்டு விலாசத்தை எழுத வைத்து "நான் வீட்டுக்கு போகும் போது இதை தபால் பெட்டியில் போட்டு விடுகிறேன்" என்றார். அன்று என் அட்வைசரிட்மிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் "சின்ன விஷயங்களுக்காக யாரோடும் சண்டை போட்க்கூடாது !"..

அந்த தபால் போய் சேர்ந்ததா இல்லையா என்றுகூட நான் என் பெற்றோறை கேட்கவில்லை ! சுமார் பத்து மாதங்களுக்கு பிரகு நான் இந்தியா சென்றேன். அப்போது என் கை ரேகை கிடைத்ததா என்று கேட்டேன்..உடனே அப்பா ஒரு ஆடியோ காஸட்டை எடுத்து வந்தார்.

அந்த காஸெட்டில் இருந்த விஷயங்களை என்னால் மரக்கவே முடியாது !! என் பெயர், என் தந்தை, தாய், பெயர், என் உடன் பிறப்புகளின் எண்ணிக்கை, என் படிப்பு, என் முழு ஜாதகம் (எந்த கட்டத்தில் எந்த கிரகம் உள்பட !!), திருமணத்தை பற்றிய என் எண்ணங்கள், என்று என்னை திகைக்க வைக்கும் அளவுக்கு குறிப்புகள் !! இத்தனை விஷயங்களும் என் கை ரேகையிலிருந்து ??

இதில் பிரமிப்பிற்க்குறிய விஷயம் என்ன தெரியுமா ? "இவனுடைய பலன்கள் இப்போது உங்களுக்கு தெரிந்தாலும், இவனுடைய இருபத்திஐந்தாம் வயதுக்கு பின் தான் இவன் தெரிந்து கொள்வான்" என்று சொல்லி இருந்தார்கள் !

இது வரை அந்த காஸெட்டில் இருந்த விவரங்கள் பொய்யாகவில்லை !!

இது எப்படி சாத்தியமாகும் ? இதைப்பற்றி நான் அவ்வளவாக சிந்திக்க மாட்டேன். என் வாழ்கை ஏர்கனவே நிர்ணயிக்கப்பட்டது என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை !! ஆனால் விஞ்ஞானரீதியில் இது என்னை பிரமிக்க வைக்கிரது !

==================

Visithra Version :

Sun TV viewers "chidambara ragasiyam" serial paathiruppengannu ninaikkaren. indha serial "Naadi" josiyaththa base panni eduththadhu.

1996 : naan padippai mudiththu kondu irundhen. calling card use panni en pettrorai indiavil koopitten. vazhakkam pola phonil sandai dhan. En appa amma an kai reegaigalai mailil anuppa sonnargal. enakku indha josiyam, jaadagam vishayame pidikkadhu. oru veruppu. enakkendru indha vulagil oruththu irukkiraal endraal avalai kandu pidikka indha josiyargaal enn ivvalavu neeram eduththu koLgiraargal ?

appodhu en professor roomukkul vandhar. Enna ore saththam ? thagaraaru ? (although s American , knew a lot about India, Indian culture, Me !) and was very practical. If it is just a fingerprint, just send it. why bother arguing with them. Goes on to take the ink pad in my office, put my thumbprint on a piece of paper and makes me write my address on an envelope.. I will mail this on my way home.. go back to work.
An important lesson I learnt that day "dont argue over silly things"..

did not even bother to check if the fingerprints reached India or not. almost ten months later I went to India. kai rEgai enna aachu ? I asked my parents. engappa udane oru audio cassetteai eduthtu vandhar..

andha cassetteil irundha vishayangalai ennal marakkave mudiyaadhu. en peyar, en amma appa peyar, enakku eththanai thambi thangaigal, eththanai thaai maamakkal, en padippu, velai, kalyaanaththai paththi en ennangal, ellam thulliyamaga sollappattu irundhadhu. idhellam en kai regailirundhu ??

idhil bramikka vaikkum vishayam enna theriyumaa ? "ivanudaya palangal ungalukku ippodhu therindhaalum, ivanukku avanudaiya 25aam pirandhanaalukku piragu dhan theriyum" endu sonnargal. adhuvum unmai !!

indruvarai, andha tape-il irukkum vishayam ellam paliththulladhu. How is this possible ? en vaazhkai erkanave nichchayikkappatta oru vishayama ? ennal adhai oppukkolla mudiyavillai ! I dont think about this tape much unless there is some major event in my life ! irundhalum, scientific-a pakkum podhu idhu ennai biramikka vaikkiradhu.. Just truly amazing!!