Tuesday, December 13, 2005

மூலையில் தூங்கும் சுமைதாங்கி

எங்க வீட்டில் இந்த பையை "ஜோல்னா பை" என்று சொல்லுவோம். ஓரு காலத்தில் இந்த பை இல்லாமல் எங்கேயுமே கிளம்ப மாட்டேன் !! இந்த பைக்கு ஏன், எப்படி, எப்போது ஜோல்னா பை என்று பெயர் வந்தது என்று எனக்கு தெரியாது.





மேல்நிலை பள்ளியில் படிக்கும்போது இந்த பையில்தான் புத்தகங்களை எடுத்து செல்வேன். மந்தைவெளியிலிருந்து தி. நகர் வரை, வாரம் மூன்று முறை வெய்யிலிலும் மழையிலும் ஐ.ஐ.டீ. கிளாஸ் சென்றபோது, இந்த ஜோல்னா பை தான் துணைவந்தது !! கல்லூரி நாட்களிலும் இதே பைதான் இருந்தது. நானும் என் நண்பர்களும் பல வண்ணங்களில் இதே போல பைகளுடன் சதாஸர்வ காலமும் காட்சி அளிப்போம்.

அமெரிக்கா வந்ததும் இந்த பையுடன்தான் !! முதன் முதலாய் இங்கு வந்தபோது நானும் என் நண்பன் ஸ்ரீவத்ஸனும் ஜோல்னா பையுடன் புது மாணவர்களை வரவேற்க்கும் "பார்டி"க்கு சென்றதை என்னால் மறக்கவே முடியாது. ஆனால் என் ஜோல்னா நாட்களுக்கு அமெரிக்கா முற்றுப்புள்ளி வைத்துவிட்டது ! இங்கு வந்து ஒரு மாதம் இருக்கும். காலையில் உப்புமா செய்து மதிய உணவுக்காக எடுத்து சென்றேன். உப்புமா குளிரில் விரைத்து பாறையாகிவிட்டது !! அடுத்த நாளே ஒரு "லெதர் பாக்பாக்" வாங்கிவிட்டேன். ஒரு காலத்தில் இணைபிரியாமல் இருந்த நானும் என் ஜோல்னாவும் பிரிந்துவிட்டோம்.


நேற்று இரவு கிளாஸட்டை திறந்து பார்த்த போது என் பை கண்ணில் பட்டது. ஒரு மூலையில் சோகமாக தொங்கிக்கொண்டு இருந்தது. பழைய நினைவுகள் கரை புரண்டு ஓட துவங்கின . . .


=====================

Visithra Version

enga veetil intha paiyai "jOlnaa pai" enRu solluvOm. Oru kaalaththil intha pai illaamal engkaiyumE kilamba maaTTEn !! indha paikku En, EppaTi, eppOthu jOlnaa pai enRu peyar vanthathu enRu enakku theriyaathu.

mElnilai paLLiyil paTikkumpOthu intha paiyilthaan puththaganggaLai eTuththu selvEn. manthaiveLiyilirunthu T. Nagar varai vaaram moonRu muRai veyililum mazhaiyilum IIT class sendra pothu, intha jOlnaa pai thaan thuNaivanthathu !! KallUri naaTkaLilum idhE paithaan irunthathu. naanum en naNpargaLum pala vaNNaGaLil idE paiyuTan sathaaSarva kaalamum kaaTchi aLippOm.

amerikaa va~nthathum i~ntha paiyuTanthaan !! mudhan muthalaay i~Ggu va~nthapOthu ~naanum en ~naNpan SrIvathSanum jOlnaa paiyuTan pudhu maaNavargaLai varavERkkum "paarTi"kku senRathai ennaal maRakkavE muTiyaathu. aanaal en JOlnaa ~naaTkaLukku amerikkaa muRRupuLLi vaiththuviTTathu ! i~Ggu va~nthu oru maatham iRukkum. Kaalaiyil uppumaa seythu mathiya uNavukkaaka eTuththu senREn. uppumaa kuLiril paaraiyaakiviTTathu !! aTuththa ~naaLE oru "lethar baakpaak" vaa~ggiviTTEn. oru kaalaththil iNaipiriyaamal iru~ntha ~naanum en JOlnaavum piri~nthuviTTOm.

netriravu Closet'ai thiranthu paarththa pOthu en pai kaNNil paTTathu. pazhaiya ninaivukaL karai puraNTu OTa thuvangina . . .

5 Comments:

At 7:52 PM, Blogger துளசி கோபால் said...

அட, நேத்துதாங்க, பால் மட்டும் வாங்க இங்கே பக்கத்துலே இருந்த ஒரு கடைக்குப் போறப்ப நினைச்சேன். எதுக்கெடுத்தாலும் ப்ளாஸ்டிக் பை ன்னு இருக்கமே. ஒரு ஜோல்னா இருந்தா எவ்வளோ நல்லாருக்குமுன்னு.

 
At 6:34 AM, Blogger Visithra said...

it lasted so long? and still looks good? hummm nengeh rombeh nalla studentoh? ;P

 
At 4:17 PM, Blogger Balaji S Rajan said...

ஐயோ பாவம். வாழ்க்கையில்ல சில சமயம் இப்படி தான் சில பொருள்கள் நம் மனசை வருடும். நல்ல இனிய நினைவுகள் இல்லையா!

 
At 9:04 PM, Blogger Unknown said...

கோபால், ஜோல்னா ஒண்ணு வாங்கிடுங்க !!

விசித்ரா, நான் ரொம்ப நல்ல மாணவன் ..

பாலாஜி சார், உண்மை. போன வாரம் எதோ பழைய டப்பா ஒன்றில் என் அப்பா வாங்கி கொடுத்த முதல் ஷேவிங் செட்டை பார்த்தேன்.. திறும்பவும் மலரும் நினைவுகள் !!!

 
At 4:09 AM, Anonymous Anonymous said...

tamilla bloga romba interestinga irukke,
namba pesura tamilla padhi aangilam kalandhu irrukku.

Thooya tamilla pesanumnuthan aasai.
aana enna pandradhu pazhagidichu.



:-)

Anamika.

 

Post a Comment

<< Home