Sunday, March 11, 2007

சிங்கார சென்னை..

போன மாதம் சென்னையில் 14 நாட்கள்! இந்த இரண்டு வாரங்களில் பல அனுபவங்கள், அனுதாபங்கள்.

மனைவியின் தாத்தா பாட்டி "சதாபிஷேகம்". சந்தோஷமான சூழ்நிலை. முதல் சில நாட்கள் பொனது தெரியவில்லை!




அம்மா முட்டி உடைந்து போய், அறுவை சிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்தார். அத்தனை வலியிலும், எங்களுக்காக, பேத்திகளுக்காக சிரித்து கொண்டு இருந்தார். எனக்கு சந்தோஷம், சோகம், வியப்பு, கவலை. வார்தைகளில் சொல்ல முடியாத மனக்கலவரம்.



அம்மா ஆசைக்காக சின்னவளுக்கு "ஆயுஷ் ஹோமம்" செய்தோம்! செய்த அன்று இரவே அமெரிக்கா திறும்பினோம் !




சென்னை மாநகரம் சிங்காரமாகத்தான் உள்ளது! எனக்கு தான் அவ்வப்போது "சோக கன்னாடி" மூலம் பார்பது போல ஒரு பிரமை!

Labels: , , , , , ,

2 Comments:

At 10:50 PM, Blogger Sree's Views said...

Photos romba nalla irukkudhunga...chennaiya edhukunga 'soga kanaadi' la parpadhupola irundhudhu?
Vittuttu poga manan illamaiyaa?

 
At 6:04 AM, Blogger sury siva said...

தமிழிலே உங்கள் வலைப்பதிவு மன நிறைவு தருவதாக இருந்தது.

உங்கள் ஊரில் பனியினால் படர்ந்த சிவனைக்கண்டது புல்லரித்தது.
பார்த்தால் எங்கள் சம்பிரதாயத்தினை சேர்ந்தவராக காணப்படுகிறீர்கள்.

அம்மா சந்தோஷத்திற்காக சின்னவளுக்கு ஆயுஷ்ஹோமம் செய்தேன்
என்று சொல்லும்போது பெரியோருக்கு தாங்கள் தரும் மதிப்பும் மரியாதையும்
புலப்படுகிறது.

இருப்பினும், முதிர்ந்தவன் என்ற முறையில், ஒரு கருத்து மட்டும் சொல்ல‌
வேண்டும்.

நமது கலாசாரம், நமது பண்பாடு எல்லாவற்றினையும் நமது புத்திரச் செல்வங்களுக்கு
அறியப்படுவது நமது கடமை. மேலும், அந்தக்குழந்தைகள் பெரியவர்களாகும்போது
தமது போட்டோக்களைப்பார்த்து வியப்பது மட்டுமல்ல, தனது தாய் தந்தை யின்
அன்பினையும், பாசத்தினையும், நினைவு கூர்ந்து போற்றுவார்கள். இது ஆல விருக்ஷம்
போன்ற சம்பிரதாயம். நாம் போற்றும் தருமத்தின் சில எதிர்பார்ப்புகள். அதை நாம் போற்றி
வளர்ப்பது சாலச்சிறந்தது.

தருமத்தினை ரக்ஷியுங்கள். தருமம் உங்களை ரக்ஷிக்கும்.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆசிகள்.

சிவ.சூரிய நாராயணன்.
சென்னை.
http://vazhvuneri.blogspot.com

 

Post a Comment

<< Home