Sunday, December 18, 2005

ஜாவாஸ்கிருப்ட் : இன்றைய ஸம்ஸ்கிருதம் ?

ஜாவாஸ்கிருப்ட் : இன்றைய ஸம்ஸ்கிருதம் ?

அண்மையில் எங்கள் வீட்டில் என் இரண்டாவது குழந்தையின் பெயர்சூட்டு விழா நடைபெற்றது. வாத்தியார் வீட்டுக்கு வந்து பூஜையை நடத்தி வைத்தார். எங்களுக்கு மிகவும் நெருக்கமானவர். முதலில் நடந்த கணபதி ஹோமத்தை நான் செய்தேன். பிறகு பெயர் சூட்டும் பூஜையில் உள்ள மந்திரங்களை நான் சொல்ல வேண்டி இருந்தது. அப்போது கால கட்டாயத்தினால் அவர், "இந்த மந்திரங்களை நான் சொல்லறேன். நீங்க காயத்ரீ மந்திரத்தை ஜபிச்சுணடே இருங்கோ. கடைசீல என் கூட சேர்ந்து சொல்லுங்கோ !". என்றார். நானும் அவருடைய வேகத்திற்க்கு ஈடு கொடுக்க முடியாததால், "சரி" என்று சொன்னேன். இதில் எனக்கு கொஞ்சம் மனவருத்தம் தான் ! குழந்தை என்னுடையது. பெயர் வைப்பவன் நான். இதே மந்திரம் தமிழிலோ ஆங்கிலத்திலோ இருந்திருந்தால் நானே சொல்லி இருப்பேனே !!


இது நடந்து சில நாட்களில், என் ஆங்கில வலைப்பதிவின் உருவத்தை ("template") மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது எனக்கு "ஜாவா ஸ்கிருப்ட்" கற்றுக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ பொருமை இல்லை ! என் நண்பரின் மகன் நிகில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தான். அவனுக்கு "ஜாவா ஸ்கிருப்ட்" தெரியும். அவன் என்ன சொன்னான் தெரியுமா ? "நான் இந்த code எழுதறேன். நீங்க உங்கள் லிங்க் லிஸ்ட் மட்டும் எடுத்து முன்னாடியும் பின்னாடியும் இந்த code எழுதிக்கோங்க !". இதிலும் எனக்கு அதே மன வருத்தம் தான்.

அந்த காலத்தில் பிராமணர்கள் படிப்பறிவை பயன்படுத்தி, படிப்பறிவில்லாதோரை ஏமாற்றியதாக சொல்லும் இன்றைய சமூகத்தில், பிராமணனாக பிறந்த எனக்கு அன்றைய படிப்பரிவில்லாதவனின் நிலமை தான் !!

அன்று ஸ்ம்ஸ்கிருதம் தெரியாதவனின் நிலை இன்று "ஜாவா ஸ்கிருப்ட்" தெரியாதவனுக்கு வந்துவிட்டது. இன்னும் 25-50 ஆண்டுகளில் ஸாப்ட்வேர் தெரிந்தவர்கள், தெரியாதோர் வீட்டுக்கு சென்று "வேலைகள்" செய்து தட்ஷணை வாங்கும் காலம் வந்துவிடும் !!

என்னை பொருத்தவரை இவ்வுலகில் நான்கு ஜாதிகள் தான். அதை படமாய் கீழே வரைந்திருக்கிறேன்.



இந்த பிரிவுகள் அன்றுமுதல் இன்றுவறை மாறவில்லை !! படிக்காத ஏழைகள் எல்லோராலும் ஏமாற்றப்படுகின்றனர். படித்த ஏழைகள் படிப்பறிவை பணத்துக்கு பயன்படுத்த முடியாமல், ஞானம் செல்வத்தைவிட உயர்ந்தது என்று பிரசாரம் செய்வார்கள். இதில் பணம் என்றுமே பணமாகத்தான் இருக்கிறது. ஆனால் படிப்பு அல்லது ஞானம் என்பது காலத்தின் வெவ்வேறு தருணங்களில், பல அவதாரங்கள் எடுத்துள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்னால், வேத காலங்களில் ஸாஸ்திர சம்பிரதாயங்கள் சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இன்று அமெரிக்காவில் உளவு ஞானம் முக்கியத்துவம் அடைந்துள்ளது. சிலறுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை வைத்து உலக வரலாற்றையே மாற்றுகிறார்கள் ! மேலை நாடுகளின் தொழில்நுட்ப முதன்மை இப்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது. ஏன் ? இந்தியாவும் சீனாவும் சாப்டுவேர், உற்ப்பத்தி போன்ற துறைகளில் முதலிடத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றன. இன்று சாப்டுவேர், உற்ப்பத்தி ஞானம் வேத பாராயணங்களின் இடத்தை பிடித்து விட்டன !

நான் பிரித்துள்ள சாதிகள் மாறும் என்று நினைக்கிறீர்களா ?

ps. I have been working on this post for the last one week. There is no visithra version for this post because it has been rewritten in english separately. Hasnt been posted yet. Working on the political correctness !!

visithra, et. al., wait for a day or two and you will see the englipish version..

3 Comments:

At 1:03 AM, Blogger G.Ragavan said...

சுந்தர், நானும் சாப்பிட்டவேருதான் (software). ஆனா எனக்கும் ஜாவா தெரியாது. :-) அதப்பத்தி யாரு கவலைப்பட்டா. நமக்குதான் வோர்டு, பவர்பாயிண்ட், எக்செல் ஷீட் எல்லாம் தெரியுமே! :-)))))

 
At 4:43 AM, Anonymous Anonymous said...

சுந்தர்..

ஸ்பெல்லிங் பற்றிக் கவலைப்படாதீர்கள்..
போகப்போக சரியாகிவிடும்..
தொடர்ந்து எழுதுங்கள்..ஆர்வத்திற்குப் பாராட்டுகள்..

ராகவன்,

உங்கள் கீபோர்டில் ctrl, C, V இருக்குமே.. பிற்கென்ன ?

 
At 11:03 PM, Blogger Unknown said...

கோயின்சாமி-8a, மிக்க நன்றி. திருத்திவிட்டேன்.

ராகவன், ஹா ஹா .. சரி தான்.. வோர்ட் இருக்க பயம் ஏன் !!

பூஸ்ட், பாராட்டுக்கு நன்றி.

:)

 

Post a Comment

<< Home