Sunday, February 28, 2010

ஒரே ஒரு போஸ்

நான் : ஒரே ஒரு "போஸ்" குடு டா செல்லம் !

என் மகள் :




நான் : சரி.. இதுவும் ஒரு "போஸ்" தான்!


=============

Visithra version :

Me : please give me a pose!

Daughter: poses like KALi!

Me : ok.. this is also a Pose!


.

Labels: , , ,

Saturday, May 10, 2008

மனிதன் என்பவன்

அன்மயில் "தசாவதாரம்" படத்தின் இசை வெளியீட்டு விழாவை சன் டீ. வி.யில் பார்தேன்.

அதில் கலைஞரை என்ன சொல்லி அறிமுகம் செய்தார்கள் தெரியுமா?

"தமிழ் திரையுலகை காக்கும் கடவுள்!"

நாத்திகம் பேசும் கலைஞர் கடவுளே ஆகிவிட்டார்!

கடவுளை நம்புவதை விட மனிதனை நம்பு என சொன்னவருக்கே இந்த கதி!

கலைஞருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.


=======================
visithra version:

anmaiyil "dasavadharam" padaththin isai veLiyeetu vizhavai Sun TVil paarthen.

Adhil kalaignarai enna solli arimugam seidhargal theriyuma?

"Tamizh thiraiulagai kakkum kadavuL!"

Naathigam pesum kalaignar kadavule aagivittar!

Kadavulai nambuvadhai vida manidhanaiye nambu endru sonnavarukke indha gadhi!

Kalaignarukku enadhu aazhnda anudhabangal.

Labels: , , , , , ,

Sunday, March 11, 2007

சிங்கார சென்னை..

போன மாதம் சென்னையில் 14 நாட்கள்! இந்த இரண்டு வாரங்களில் பல அனுபவங்கள், அனுதாபங்கள்.

மனைவியின் தாத்தா பாட்டி "சதாபிஷேகம்". சந்தோஷமான சூழ்நிலை. முதல் சில நாட்கள் பொனது தெரியவில்லை!




அம்மா முட்டி உடைந்து போய், அறுவை சிகிச்சை முடிந்து படுக்கையில் இருந்தார். அத்தனை வலியிலும், எங்களுக்காக, பேத்திகளுக்காக சிரித்து கொண்டு இருந்தார். எனக்கு சந்தோஷம், சோகம், வியப்பு, கவலை. வார்தைகளில் சொல்ல முடியாத மனக்கலவரம்.



அம்மா ஆசைக்காக சின்னவளுக்கு "ஆயுஷ் ஹோமம்" செய்தோம்! செய்த அன்று இரவே அமெரிக்கா திறும்பினோம் !




சென்னை மாநகரம் சிங்காரமாகத்தான் உள்ளது! எனக்கு தான் அவ்வப்போது "சோக கன்னாடி" மூலம் பார்பது போல ஒரு பிரமை!

Labels: , , , , , ,

Friday, November 17, 2006

அழகான கோஸ், கீரை ?!

லிவர்மோர் சிவா விஷ்னு கொவிலில் பாதைகளை அலங்கரிக்க "floral lettuce" உபயோக படுத்துகிரார்கள்..

போன வாரம் எடுத்த புகைப்படங்கள்..




உள்ளே பனி உரைந்து இருந்தது..







============================
Visithra Version :
Livermore Shiva Vishnu kovilil paadhaigalai alangarikka "floral lettuce" ubayoga paduththugirargal.. pona vaaram eduththa pugaippadangal..

poovukkul pani uraindhu irundhadhu..

Tuesday, November 14, 2006

ஒரு நிமிடம் !

நான் : சீக்கிரமா வா !
மனைவி : ஒரு நிமிஷம் !

ஐந்து நிமிடங்களுக்கு பின்...

நான் : குழந்தைகள் ரெடி ஆயாச்சு... சீக்கிரமா வா !
மனைவி : பத்து தேச்சு முடிச்சுட்டேன்.. ஒரு நிமிஷம் !

பத்து நிமிடங்களுக்கு பின்...

நான் : குழந்தைகளை வான்ல போட்டு சீட் பெல்டும் போட்டாச்சு ..கடையை மூடிடுவான்.. வா !
மனைவி : உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாதா ! "ஒரு நிமிஷம்", ஒரு நிமிஷமுன்னு எத்தனை முரை சொல்லணும் ?

நான் : !!!!!!!!

=============================

Visithra version :

Naan : Seekiramaa vaa !
Manaivi : Oru nimisham

aindhu nimidangalukku pin

naan : kuzhandhaigal ready aayaachu.. seekiramaa vaa !
manaivi : paththu thaichchu mudichchutten.. oru nimisham !

paththu nimidangalukku pin

naan : kuzhandhaigalai van'la pottu seat beltum pottachchu.. kadaiya moodiduvaan. vaa!

manaivi: unakku eththanai dhadavai sonnalum puriyaadha ! oru nimisham oru nimishammunnu eththanai dhadavai sollanum ?

Naan : !!!!!!!!!

Sunday, October 01, 2006

சரஸ்வதி பூஜை

இன்று சரஸ்வதி பூஜை செய்தோம். பழைய நினைவுகள் கரை புரண்டு ஓட துவங்கின..

சின்ன குழந்தையாக இருக்கும்போது சரஸ்வதி பூஜையை மிகவும் எதிர்பார்போம். நான் ஏழாவது எட்டாவது வகுப்பில் இருக்கும்போது உடல் நலம் சரியாக இருந்த நாட்களை விட இல்லாத நாட்கள் அதிகம்! விளையாட்டு, தெருவில் கிரிகெட் ஆடுவது மட்டும் தான்! ஆனால் படிப்பில் புலி!! இந்த நிலமையில், எனக்கு பிடித்த கடவுள்களில் விநாயகருக்கு அடுத்த இடம், சரஸ்வதி தேவிக்குத்தான்!

படிப்பு நன்றாக வரவேண்டும் என்று விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்வேன். பூஜை அன்று காலை எழுந்து சாமிக்கு முன் எனக்கு கஷ்டமாக இறுக்கும் பாட புஸ்தகங்களை கொண்டு போய் வைத்துவிடுவேன். என் பாட்டியின் பழைய ஹார்மோனியம், என் சித்தி "Bank Exam Entrance" பு்த்தகங்கள், என் தாத்தாவின் ராமாயண புத்தகம்... எல்லாம் அதோடு இருக்கும்.

இன்று, நாங்கள் வைத்த புத்தகங்கள் ?



குழந்தையின் எலக்ட்ரானிக் ஹார்மோனியம், லீப் ஃராக் எலக்ட்ரானிக் புத்தகம், என் கணக்கு புத்தகங்கள், தாலாட்டு பாடல்கள்...

காலம் மாறிவிட்டது என்றாலும், சரஸ்வதி அருளுக்கு உள்ள ஏக்கம் இன்றும் மாரவில்லை !

=================================

Visithra version :


Indru saraswathi poojai seithom. Pazhaiya ninaivugal karai purandu oda thuvangina..

Chinna kuzhandhaiyaaga irukkumbodhu saraswathi poojaiyai migavum edhirparpom. Naan ezhavathu ettavadhu vaguppil irukkumbothdu udal nalam sariyaaga irundha naatkalai vida sariyaaga illatha naatkale athigam! vilaiyaattu, theruvil Cricket aaduvathu mattum dhan ! aanaal padippil puli. indha nilamayil, enakku pidiththa kadavulgalil vinayagarukku aduththa idam, saraswathidevikku dhan !!

padippu nanraaga vara vendum endru vizhundhu vizhundhu namaskaaram seiven ! poojai andru kaalai ezhundhu saamikku mun, enakku kashtamaaga irukkum paada puththagangalai kondu poi vaiththu viduven. en paatiyin pazhaiya Harmonium, en chittigalin "bank entrance exam" puththagangal, en thathavin ramayana puththagam.. ellam adhodu irukkum..

Indru naangal vaiththa puththagangal ?

Kuzhandhaiyin electronic Harmonium, leap frog electronic book, en kanakku puththagangal, thalaattu paadalgal ...

Kaalam maarivittadhu endralum, Saraswathi arulukku ulla ekkam innum maaravillai!

Saturday, September 02, 2006

இன்பம் என்றால் இது !!

வினாயகர் சதுர்த்தி அன்று

என் இரு குட்டீஸ்களும் பாவாடை அணிந்து ..





நான் "கிழ - போல்ட்" ஆகிக்கொண்டு இருக்கிறேன்!!

==========================

Visithra Version

vinayagar Chathurthi andru

en iru kuttiesgalum paavaadai aNindhu ..

Naan "kizha - bolt" aagikkondu irukkiren !!