சரஸ்வதி பூஜை
இன்று சரஸ்வதி பூஜை செய்தோம். பழைய நினைவுகள் கரை புரண்டு ஓட துவங்கின..
சின்ன குழந்தையாக இருக்கும்போது சரஸ்வதி பூஜையை மிகவும் எதிர்பார்போம். நான் ஏழாவது எட்டாவது வகுப்பில் இருக்கும்போது உடல் நலம் சரியாக இருந்த நாட்களை விட இல்லாத நாட்கள் அதிகம்! விளையாட்டு, தெருவில் கிரிகெட் ஆடுவது மட்டும் தான்! ஆனால் படிப்பில் புலி!! இந்த நிலமையில், எனக்கு பிடித்த கடவுள்களில் விநாயகருக்கு அடுத்த இடம், சரஸ்வதி தேவிக்குத்தான்!
படிப்பு நன்றாக வரவேண்டும் என்று விழுந்து விழுந்து நமஸ்காரம் செய்வேன். பூஜை அன்று காலை எழுந்து சாமிக்கு முன் எனக்கு கஷ்டமாக இறுக்கும் பாட புஸ்தகங்களை கொண்டு போய் வைத்துவிடுவேன். என் பாட்டியின் பழைய ஹார்மோனியம், என் சித்தி "Bank Exam Entrance" பு்த்தகங்கள், என் தாத்தாவின் ராமாயண புத்தகம்... எல்லாம் அதோடு இருக்கும்.
இன்று, நாங்கள் வைத்த புத்தகங்கள் ?
குழந்தையின் எலக்ட்ரானிக் ஹார்மோனியம், லீப் ஃராக் எலக்ட்ரானிக் புத்தகம், என் கணக்கு புத்தகங்கள், தாலாட்டு பாடல்கள்...
காலம் மாறிவிட்டது என்றாலும், சரஸ்வதி அருளுக்கு உள்ள ஏக்கம் இன்றும் மாரவில்லை !
=================================
Visithra version :
Indru saraswathi poojai seithom. Pazhaiya ninaivugal karai purandu oda thuvangina..
Chinna kuzhandhaiyaaga irukkumbodhu saraswathi poojaiyai migavum edhirparpom. Naan ezhavathu ettavadhu vaguppil irukkumbothdu udal nalam sariyaaga irundha naatkalai vida sariyaaga illatha naatkale athigam! vilaiyaattu, theruvil Cricket aaduvathu mattum dhan ! aanaal padippil puli. indha nilamayil, enakku pidiththa kadavulgalil vinayagarukku aduththa idam, saraswathidevikku dhan !!
padippu nanraaga vara vendum endru vizhundhu vizhundhu namaskaaram seiven ! poojai andru kaalai ezhundhu saamikku mun, enakku kashtamaaga irukkum paada puththagangalai kondu poi vaiththu viduven. en paatiyin pazhaiya Harmonium, en chittigalin "bank entrance exam" puththagangal, en thathavin ramayana puththagam.. ellam adhodu irukkum..
Indru naangal vaiththa puththagangal ?
Kuzhandhaiyin electronic Harmonium, leap frog electronic book, en kanakku puththagangal, thalaattu paadalgal ...
Kaalam maarivittadhu endralum, Saraswathi arulukku ulla ekkam innum maaravillai!